கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ரேணுகா முன்னிலை வகிக்க, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கலந்து கொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினர்.